சில தனியார் வங்கிகளை தவிர, இந்தியாவில் உள்ள 58 வங்கிகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாளையும் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராமப் புறங்களில் இன்னும் அதிகக் கிளைகள் தொடங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு முழுவதும் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருப்பூரில் மட்டும் ஒரு நாளைக்கு 600 கோடி ரூபாய் என்று இரண்டு நாளில் 1200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வங்கிப்பணிகள் அடியோடு முடக்கப்பட்டிருப்பதால், பலதரப்பு மக்களும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வங்கிப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் மேலும் போராட்டங்கள் தீவிரப் படுத்தப் படும் என்றும் கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment