நிலக்கரி சுரங்க கணக்குவழக்கில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால், அவை முடக்கப் பட்டது.முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே, எதிர்கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டனர். நிலக்கரி சுரங்க கணக்கு வழக்குகளில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டது என்கிற மத்திய அரசின் தணிக்கைக் குழு அறிக்கை நகலை கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள், பிரதமரை பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டதால், நாடாளுமன்றத்தை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார் மக்களவை தலைவர் மீரா குமார்.
நண்பகல் 12 மணிக்குப் பின்னர் நாடாளுமன்றம் தொடங்கியபோதும், அதே போல பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று கூச்சலிட்டதால், இன்று நாள்முழுவதும் நாடளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது. இதே போன்று மாநிலங்களைவையிலும் பிரதமர் பதவி விலகிகக்கோரி எதிர்கட்சிகள் கூச்சலிட்டு அவையில் அமளி நீடித்ததால், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப் பட்டது.
நிலக்கரி சுரங்க ஏலம் விடப்பட்டபோது, நிலக்கரி சுரங்க பொறுப்பு பிரதமர் தலைமையில் இருந்ததால், இந்த வருவாய் இழப்புக்கு பிரதமர் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கை என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:
Post a Comment