வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சிலவேங்கைகள் முகவரி அறிவதில்லை
பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும்
புலிகளின் கல்லறை தெரிவதில்லை.
காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதும் இல்லை - இற்கு
வாழும் தலைமுறை சாகும் கரும் புலி
வாழ்வை அறிவதும் இல்லை
வாழ்வை அறிவதும் இல்லை - அவர்
வாசம் புரிவதும் இல்லை.
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் - ஒரு
தொட்டில் வணர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லிப் புறப்பட்டுப் போவார் - எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்.
நொடியில் பெரு வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சம் பெரும் புயலாகும்.
நினைவளியா நாட்களிலிருந்து...........


No comments:
Post a Comment