லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.
சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று போராட்டத்தை மேலும் பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களை அடித்த சிங்களவர்கள் தற்போது லண்டனிலும் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர் ! இதனை 3 லட்சம் தமிழர்களும் வேடிக்கை பார்ப்பதா?


No comments:
Post a Comment