இன்று உக்ரேன், போலந்து நாடுகளில் நடக்கவுள்ள ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பிக்கிறது.இந்தப் போட்டியின் வெற்றி தோல்விகள் ஒரு புறம் கிடக்க இங்குள்ள உதைபந்தாட்ட கட்டாக்காலிகளால் வரும் பிரச்சனை ஐரோப்பாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
வழமையாக வடக்கு ஐரோப்பாவில் நடந்து வந்த ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைபந்தாட்டம், முதல் தடவையாக ஐரோப்பிய உதைபந்தாட்ட கிண்ணம் இம்முறை கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்திலும், பக்கத்து நாடான உக்கிரையின் நாட்டிலும் நடாத்தப்படுகின்றது.
மிகவும் விறு விறுப்பாக அமையவிருக்கும் இந்த ஆட்டங்களை இந்த இரு நாடுகளும் எப்படி நடத்தி முடிப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க இந்த இரு நாடுகளின் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் நடந்து கொள்ளும் விடயம் தற்போது எல்லோரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது.
இங்கிலாந்து தொலைக்காட்சியான பீ.பீ.சி. ஊடக்குழு இந்த இரு நாடுகளுக்கும் சென்று, உதைபந்தாட்ட பார்வையாளர்கள் நடந்து கொள்ளும் முறைகளை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இதன் ஒலிப்பதிவு டென்மார்க் தொலைக்காட்சியில் நேற்று இரவு காட்டப்பட்டது.
போலந் நாட்டிலும், உக்கிரையின் நாட்டிலும் கழகங்களுக்கிடையே நடந்த உதைபந்தாட்டங்களில், பார்வையாளர்களின் ஒரு பகுதியினர் கலவரங்களில் ஈடுபடுவதும், மிகவும் வன்முறையாக எதிர் அணி ஆதவாளர்களை தாக்குவதையும் இந்த ஒலிப்பதிவு எடுத்துக்காட்டுகின்றன.
சாதாரணமாக கழகங்களுக்கிடையே நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளில் சில வன்முறைகள் நடப்பது வழமைதானே என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட்டு சற்று வித்தியாசமாக இந்த ஒலிப்பதிவு அமைந்துள்ளது.
போலன்ட் நாட்டு மைதானத்தில் ஒரு இனம், ஒரு நாடு என்ற கொடிகள் கட்ப்பட்டிருந்தது மேலும் இதே இடத்தில் யுதர்கள் பன்றிகள், யுதர்கள் பன்றிகள் என ஆவேசமாக ஆதரவாளர்கள் கத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இன்னொரு மைதானத்தில் வந்திருந்த பார்வையாளர்களின் ஒரு பகுதியினர் கைகளை உயர்த்தி கேய் கிட்டலர் என கோசம் போடுவதையும் இந்த ஒலிபரப்பில் பார்க்கும் அதே வேளையில் இந்த மைதானத்தில் உதைபந்தாட்டம் பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் கடுமையாக தாக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
தாக்கப்பட்ட பார்வையாளர்கள் இந்திய மாணவர்கள், இவர்கள் தாங்கள் கல்வி கற்கும் நாடான உக்கிரையின் நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மைதானத்தில் துரத்தி துரத்தி இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதும், பக்கத்தில் நிற்கும் பொலிசாரும், மைதான பாதுகாப்பாளரும் வேடிக்கை பார்ப்பதையும் இந்த ஒலிப்பதிவில் காணக்கூடியதாகவுள்ளது.
இது எமது நாடு, ஒரு இனம், வெள்ளை இனம் என இந்த உதைபந்தாட்ட கடும்போக்குவாதிகள் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
உதைபந்தாட்டம் நடக்கவிருக்கும் அனைத்து மைதானங்களிலும் உதைபந்தாட்ட கடும்போக்குவாதிகளின் செயல்பாடுகளை இந்த ஒலிப்பதிவு எடுத்துக்காட்டியதோடு நிற்காமால் இது சம்பந்தமாக ஐரோப்பிய உதைபந்தாட்ட ஒன்றியம் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐனநாயக் கட்டமைப்புக்குள் வந்துவிட்டனர், இந்த நாடுகளும் ஐரோப்பிய உதைபந்தாட்ட கிண்ணத்தை நடாத்தும் வாய்புகள் அளிக்கவேண்டும் என ஐரோப்பிய உதைபந்தாட்ட ஒன்றியம் கூறியதோடு நிற்காமால், ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைபந்தாட்டங்கள் நடக்கவிருக்கும் மைதானங்களில் உதைபந்தாட்ட கடும்போக்குவதாதிகள் குழப்பம் விளைவிக்கும் சர்ந்தப்பங்களில் குறிப்பிட்ட ஆட்டத்தை நடுவர் இடை நிறுத்த வேண்டுமென ஐரோப்பிய உதைபந்தாட்ட ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
முக்கியமாக உக்கிரையின் நாடு மனித உரிமைகளை மதித்து நடப்பதில்லையென பல ஐரோப்பிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதையும், சில நாடுகள் இதற்கும் அப்பால் தம் நாட்டு பிரதிநிதிகளை உதைபந்தாட்ட நிகழ்வுகளுக்கு அனுப்பமாட்டோம் என வேறு கூறியுள்ளனர்.
உதைபந்தாட்ட கடும்போக்கு வாதிகள் மேற்கு ஐரோப்பிலும் இருக்கின்றனர் என்ற வாதமும் தற்போது முன்வைக்கப்படுகின்றன,
எனினும் மேற்கு ஐரோப்பாவின் உதைபந்தாட்ட கடும்போக்கு வாதிகள் கூடுதலாக இங்கிலாந்து நாட்டில் இருப்பதால், இந்த கடும்போக்கு வாதிகள் உக்கிரையின் நாட்டுக்குள் வருவதற்கு உக்கிரையின் நாடு அனுமதிக்குமா என்பது ஒரு கேள்வி.
உக்கிரையின் நாட்டுக்கும், இங்கிலாந்து நாட்டுக்கும் இடையில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட போட்டியை இந்த இரு நாட்டு கடும்போக்கு வாதிகள் குழப்புவார்கள் என்ற அச்சம் வேறு வந்துள்ள நிலையில், கடமையில் இருக்கும் பொலிஸாரும், மைதான பாதுகாவளர்களும் வழமைபோல் வேடிக்கை பார்ப்பார்களா என்பதை யூன் மாதம் 19ம் திகதி வரை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வீத உதைபந்தாட்ட கடும் போக்கு வாதிகள் ஐரோப்பிய உதைபந்தாட்ட கிண்ணத்தை குழப்பிவிட இடம் அளிக்கக் கூடாது என ஐரோப்பிய உதைபந்தாட்ட ஒன்றியம் போலன்ட், உக்கிரையின் நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.


No comments:
Post a Comment