பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர், சிறிலங்கா அதிகாரிகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், பிரித்தானியாவில இருந்து வெளிவரும் guardian. ஊடக இணையத்தில் வெளிவந்துள்ள பதிவொன்று, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் பிரபல மனித உரிமைவாதியான Paul Canning, இவ்விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளதோடு, care2 அமைப்பின் இணையத்தின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து தமிழர்களை திருப்பி அனுப்பாதே எனும் மின்னொப்ப போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நாடுகடத்தப்படவிருந்த 40 பேரை, திருப்பி அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையினை காரணமாக கொண்டு, வெளிவந்துள்ள பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்பானது, பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் எதிர்பார்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரித்தானிய guardian ஊடகத்தினால் வெளிக்கொணரப்பட்ட விடயம், இவ்விவகாரத்தினை அடுத்த கட்டத்திற்கு தள்ளியுள்ளதையே வெளிக்காட்டுவதாக கூறப்படுகின்றது.
தமிழர்கள் திருப்பி அனுப்படுவதை நிறுத்தக் கோரி, மின்னொப்ப போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள care2 அமைப்பானது, பல மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட மையமாகவுள்ளது.
மனித உரிமையாளர்கள் மற்றும் பசுமை இயக்க செயற்பாட்டாளர்கள் என மனிதநேயத்தினை முன்னிறுத்தும் அமைப்பாக care2 உள்ளது.


No comments:
Post a Comment