இதனை கொச்சைப்படுத்தி காங்கிரஸ் அரசின் கைக்கூலியான தினமலர் என்னும் இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. செங்கொடியை அவமானப்படுத்தியது மட்டுமல்லாது ஈழத் தமிழர் போராட்டத்தையும் அது கொச்சைப்படுத்த தயங்கவில்லை. காதலில் தோல்வி என்றால் செங்கொடி நஞ்சருந்தி இருக்கலாமே, இவ்வளவு கொடுமையாக இறக்க அவர் ஏன் முனையவேண்டும்? செங்கொடி இறப்பதற்கு முன்னரே பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அதுவும் இவர்கள் கண்களை மறைத்துவிட்டதா?
காங்கிரசும் கருணாநிதியும் போடும் பிச்சைகாசுக்காக தமிழனையும் விற்று ஈழத் தமிழர் போராட்டங்களையும் விற்கும் இதுபோன்ற ஊடகங்களை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் புறக்கணிக்கவேண்டும். ஒருவர் உண்மையாகவே கெட்டவராக இருந்தால் கூட அவர் இறந்தபின்னர் அவரது சாவுவீட்டிற்குச் செல்வோர் அவர் செய்த நல்ல காரியங்களைப் பற்றியே பேசுவார்கள். இது தமிழர்களின் பாரம்பரியம் அல்லது நாகரீகப் பழக்கம் என்று கூடச் சொல்லலாம்.
இந்த நாகரீகம் கூடத் தெரியாமல் வெறும் பணத்துக்காகவும் அரசியலுக்காவும் பெண்களை விலைபேசி விற்கும் கேவலமான எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு ஊடகமாக இருக்கிறது இந்தத் தினமலர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று எழுதி மொத்தப் பெண் இனத்தையே இவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இதனை அதிர்வு இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதுமட்டுமல்லாது தேசிய தலைவரை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்த ஐயா நெடுமாறன் அவர்களையும் இலங்கைத் தமிழர்களுக்காக போடாச் சட்டத்தில் பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்து வரும் அண்ணன் வைகோ அவர்களையும் தினமலர் இழிவாக எழுதியுள்ளது. அண்ணன் சீமான், வைகோ மற்றும் ஐயா நெடுமாறன் ஆகியோர் இலங்கைப் பிரச்சனையை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தினமலர் எழுதியுள்ளது. இத் துணிச்சலை யார் கொடுத்தது?
ராஜீவைக் கொலைசெய்த மூவரையும் குற்றவாளிகாகப் பார்க்கவேண்டுமாம். இந்த மூவரும் தமிழர்கள் என்றால் ராஜீவ் கொலைசெய்யப்படும்போது எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று கேள்வி எழுப்புகிறது தினமலர்.
ஐயா தினமலர் ஆசிரியரே குற்றஞ்சாட்டப்பட்டவர் கொலையாளி என்றாகிவிடுமா? இலங்கையில் 40,000 த்தும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனரே அதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தே அப்போது எங்கே போனது உங்கள் ஞாயம்? கேட்ப்பவன் கேனையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்பார்களாம். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்படாத மற்றும் பற்றரி வாங்கிக்கொடுத்தார் என்று சந்தேகத்திலேயே பொலிசார் இவர்களைக் கைதுசெய்து கோட்டில் நிறுத்தியது என்பதனை தினமலர் இன்னும் அறியவில்லைப் போலும்.
இலங்கைக்கு அமைதிகாக்கும் படையை அனுப்பிவைத்து அங்கே ஈழப் பெண்களை குர்க்கா படையினர் கதறக் கதறக் கற்பழித்தவேளை எங்கே இருந்தது இந்தத் தினமலர் ? இல்லை இவர்கள் அதற்கு மமாவேலை பார்த்துக்கொடுத்தார்களா? ஜூலியன் வாலா படுகொலையை நேரில் பார்த்த பகத்சிங் பல ஆண்டுகள் களித்தும் பிரித்தானியா சென்று அக் கொலைக்கு காரணமான அதிகாரிகயை எவ்வாறு சுட்டுக்கொண்றான் என்பது நாம் அறிந்தே. அது தேசப் பற்று என்கிறார்கள். அப்படி என்றால் இதற்கு என்ன பொருள் என்று தெரியுமா? ஆனால் இங்கே இக் கொலையைச் செய்யாதவர்கள் மரணத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது மனுதர்மம். இதனை ஏற்க்க மறுப்பவர்கள் மானிடர்கள் அல்ல பேய்கள் அதுவும் பிணம் தின்னும் பேய்களாகவே இருக்கமுடியும்!
செங்கொடி இறப்பதற்கு முன்னரே பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள். 1
செங்கொடி இறப்பதற்கு முன்னரே பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள். 2
அதிர்வு


No comments:
Post a Comment