
உலகம் துங்குகிறது, அதனால் உண்மையும் தூங்குகிறது.
நீதி விலைபோய்விட்டது, அதனால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடமுடிகிறது.
அதிகாரம் உள்ளவர்கள் செய்வது குற்றமில்லை, தமிழர்கள் செய்வதெல்லாம் குற்றமாகிறது,
கேட்க யாருமில்லையா ! எட்டு திக்கும் எமக்கு எதிரிகள், எழடா தமிழா எழு,
விட்டகுறை தொட்ட குறை வேண்டாம், விடாது தொடர்வோம் விடிவைத்தேடி.
இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசினால் கேட்கிறார்கள் இல்லை,
இந்திய பாராளுமன்றில் பேச முழுமையாக அதை செவிமடுக்க மற்றவர்கள் தயாராக இல்லை,
உலகமன்றத்தில் பேசினால் வல்லரசுகள் தடுக்கிறது, எங்கு முறையிடுவது தமிழா
நீ உன்னையே நம்பு, தியாகி செங்கொடி அவர்கள் போல் எழுச்சி கொள்! வெளியே வா தமிழா!
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட என தியாகி முத்துக்குமார் அவர்கள் கூறியுள்ளதை நினைவில்நிறுத்திக் கொள்ளுங்கள்! தமிழீழத்தின் உதயம் உலகத்தமிழரின் விடிவு ஆகும்! தமிழனின் விடிவிற்காய், தாமதப்படுத்தாது ஆரம்பிக்கும் போராட்ட திடலே19.09.2011ல் ஜக்கிய நாடுகள் சபை ஜெனிவா முன் உரிமைக்காகத் திரளுங்கள்! மீண்டும் எமது உரிமைக்குரலை எழுப்புவோம் வாருங்கள்! சிங்கள தேசம்தன் பலத்தைக்காட்டி உண்மையை மறைக்க 13ம் திகதி சிங்கள மக்கள் ஆற்பாட்டம் நடத்தவருகிறார்கள். நாம் பாதிக்கப்பட்ட இனம் பல உயிர்களை பறி கொடுத்த இனம் உண்மையை மறைக்க விடலாமா வாருங்கள் அலைபோல 19.09.2011ல் ஜெனிவா நோக்கி!
ஈழம் இன்னும் இரத்த வெள்ளத்தில் நனைகிறது, போர் முடிந்தும் இராணுவ அடக்குமுறை, மக்களைத்தாக்குதல், பெண்களை பலாத்காரம், பிரச்சனையைகண்டு மக்கள் கொதித் தொழுந்தால், அரசாங்கம் பயங்கரவாதிகளில் சதியே கிறீஸ் மனிதர்கள் என கூறி மக்கள் பிரச்சனையை மறைக்கிறது.
எங்கு நடக்கிறது என்றும், இது வதந்தி என்றும் கூறுகிறது, இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறது, தமிழ் மக்களை வதைக்கிறது, பிரச்சனையை தீருங்கள் அல்லது உலகநாடுகளே இனி நீங்கள் எமது விடையத்தில் தலையிடாதீர்கள் என கூறும் காலம் விரைவில் வரப்போகிறது. அல்லது தமிழரின்குணத்தை உலகம் இலங்கைக்கு வெளியில் பார்த்தால் தான் கண்திறக்குமா! உலகமே தப்பு செய்கிறாய். லிபியா மக்கள் சில நூறு இறந்தால் நீபடையெடுக்கிறாய், எமது மக்கள் கொத்து கொத்தாய் இறந்தால் படமெடுக்கிறாய், ஏன் இப்படி பாரபட்சம்,
அமெரிக்காவே! இங்கிலாந்தே, பிரான்சே, இத்தாலியே, ஜேர்மனியே, அவுஸ்திரேலியாவே, கனடாவே, இந்தியாவே, சீனாவே மற்றய நாடுகளே உங்களுக்கு என்ன இலங்கைக்கு பயமா! அல்லது உங்களுக்கு இலங்கை பொருளாதாரத் தடை விதிக்குமா, அல்லது உங்கள் நாட்டுடன் போர் தொடுக்கும்மென்ற பயமா! பல உயிர்கள் பரதவிக்கிறதே பார்த்து கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் வல்லரசுகளா அல்லது வியாபாரிகளா! பதில் கூறுங்கள்!
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்திலுள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை யூனிஅணிந்த வேற்படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பாரதியார் ஈழத்தமிழருக்காய் எழுதிய வரிகளாகவே நாம் இப்போ பார்க்கின்றோம்! உலகமே எம்மை எதிர்த்தது, இப்போ இரக்கம் காட்ட யாருமில்லை, வசதியோடு வாழ்ந்தோம் பிச்சையெடுத்து வாழும் நிலைக்கு தள்ளிவிட்டது உலகமும் அரசாங்கமும், ஆனால் எம்மை அழித்து சீரழித்து விட்டு உதவிசெய்யகூட முடியாத அரசு எம்மை மேலும் மேலும் சித்திரவதை செய்து நாடகமாடுகிறது,
மக்களுக்காக ஆட்சியா, ஆள்பருக்காக ஆட்சியா! வெறுப்பின் நிலையில் துணிவு தான் மிஞ்சும். அச்சமடையோம் என நிமிந்து நிற்கும் தமிழிச்சிகளைபாரதி தேடினார். ஈழத்தில் நாம் பார்த்தோம், இப்போதும் பார்க்கின்றோம், தியாகி.செங்கொடிபோல் அத்தகைய புதுமைப்பெண்கள் உதிந்த நாட்டில்தற் சமயம் அடக்குமுறை மீண்டும் ஒரு போரை ஏற்படுத்த முனைகிறதா. உயிரைப்பற்றி கவலை போய்விடும் போது அங்குவரும் துணிவு பயங்கரமானதுஎன அரசாங்கம் புரிந்து கொள்ளாது இருக்கிறதா! உலக நாடுகளே உங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற வாருங்கள்!
ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தை காட்டிலும்
ஆணுக்கு பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப்பெரியது
அதைவிட மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் தலைவன்
அந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்துவது கொடுமையிலும் கெடிது,
இந்த கொடுமை எதுவரை, லிபிய தலைவரின் நண்பரே
நீங்கள் வாழ்வதை விட மக்கள் வாழ்வதற்காக ஆட்சி செய்யுங்கள்,
நீங்கள் வாழ வேள்வி செய்கிறீர்கள், செய்த பலிகள் போதாதா
நீங்கள் அழிய யாகம் செய்கிறீர்கள்
அரக்கர்களை யாகம் அழிக்கும், காக்காது கொடுமையின் அரசரே!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ ? - என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?
பாரதி அன்று சொன்னார் அதை மக்கள் பின்பற்றியதால் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது, நாம் அதை மீண்டும் செய்கின்றோம்! எமக்கும் விடுதலைகிடைக்கும்!
1)கிறிஸ் பூதமாம், பெண்களைத்தாக்குகிறது, வீட்டில் பாதுகாப்பான ஆண்களைப் பிடித்து மறியல் வைக்கிறீர்கள், கிறிஸ்பூதத்தை நாம் பிடிக்ககூடாதாம், அடிக்ககூடாதாம், அப்படியானால் அவர்கள் யார். அரசே உங்கள் நண்பர்களா! என்ன கொடுமை, என்ன ஆட்சி, சரத் பொன்சேகராவே கத்துகிறார் பாவம்!
2)இரவில் யார் துணை, ராணுவம் கிறிஸ் மனிதர்களை வீடுகளுக்கு அனுப்பி கொடுமை செய்கிறது. பயத்தை உருவாக்கிறது. எமது பிரச்சனையை கூட பாராளுமன்றத்தில் கூறமுடியவில்லை என்றால், எங்குகூறுவது! அரசாங்கம் என்ன செய்கிறது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை, ஆதாரம் இருக்கிறதா என பொறுப்புள்ள அமைச்சர் வாதம் போடுகிறார், போர் குற்ற விடையத்தில் சனல் 4 வெளியிட்ட ஒளி நாடாவே பொய்என்கிறது, கிறிஸ் மனிதர்களைப் பற்றி பொலிஸ் நிலைங்களில் முறைப்பாடு கொடுத்தால், குற்றவாளியை காப்பாற்றி, நிரபராதி மக்களை தாக்குகிறது, இலங்கை அரசு கொடுமை செய்கிறது. காரணம் வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு பயப்பிடுகிறார்கள். ஏனோ தெரியவில்லை! யாரிடம் முறையிடுவது மக்களே விழித்துக் கொள்ளுங்கள்! எமது மக்களைக் காப்பாற்றுங்கள்!
3)பாதுகாக்கவேண்டியவர்கள், படுகொலைகள் செய்கிறார்கள், போர் முடிந்தது, ஆனாலும், பெண்களை ராணுவம் படுவேதனைப்படுத்துகிறார்கள். மீண்டும் இரத்தங்கள் கொதிக்கப்போகிறது. எமதுபெண்களைக்காக்க பெண்ணின் சபதத்தால் மீண்டும் பாரதப்போர், இலங்கையில் உருவாகப்போகிறது. தன் கணவனுக்கு அநீதி கிடைத்ததால் மதுரையை எரித்தார் கண்ணகி அது நியாயம், அது போல் எமதுபெண்குலத்தை காக்க ஆண்குலம் மீண்டும் குருதி சிந்தித்தான் விடுதலை பெற வேண்டுமா! உதவுங்கள் இதயமுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரே! இந்திரா அம்மையார் இருந்திருந்தால் இன்று இன்னுமொருபங்களாதேஷ் உருவாகி இருக்கும், நீங்களும் கொள்கையில் உறுதியான இந்திரா காந்தி அமையார் போன்ற பெண் தானே, அதோடு தமிழ் தலைவியல்வா, தமிழை, தமிழரை காப்பது உங்கள் கடமையல்லவா!அடிக்கு மேல் அடி கொடுங்கள். நடுவன் அரசானால் என்ன, இலங்கை அரசானால் என்ன, நீதி கேளுங்கள்! நாம் உங்கள் இனமல்லவா உரிமையுண்டு நீங்கள் குரல் கொடுக்க பயன் படுத்துங்கள் உங்கள்வல்லமையை, முதலமைச்சரே! மக்களே உங்கள் சக்தியை வலுப்படுத்துங்கள்!
4)மக்கள் புரட்சி வெடித்தே பல நாடுகளில் அமைதி பிறந்திருக்கிறது, இந்த வருடமே பல புரட்சிப்புயல் நடந்திருக்கிறது, எமது மக்களே நீங்கள் புரட்சியில் இறங்கவேண்டும், அடிக்குமேல் அடி கொடுக்கவேண்டும்,அப்போ தான் தூங்கி கொண்டிருக்கும் வியாபாரிகள், வியாபாரம் கெட்டுவிடும் என்று எமது விடையத்தை கவனிப்பார்கள், கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார் யேசு,வாருங்கள், திறக்காத கதவுகளை இடைவிடாது தட்டுவோம், உங்கள் ஒவ்வொருவருடைய கதவுகளையும் நாம் தட்டுகின்றோம்,
விடுதலை நோக்கி எமது உரிமைக்குரல் எழுப்ப ஜெனிவா நோக்கி வாருங்கள் தமிழ் மக்களே!
எட்டுத்திக்கும் தமிழன் எழுந்தால் உலகம் முழுவதும் தமிழன் கொடி பறக்கும் வாருங்கள் உலகதமிழரே!
சுவிஸ் ஈழத்தமிழரவை


No comments:
Post a Comment