
சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் செய்யும் விமர்சனங்களால் சிறிலங்கா, சீனாவை நோக்கித் தள்ளப்பட்டு விடும் என்று இந்திய கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குப் பரிமாற்றப்பட்ட இரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்திக்குறிப்பு ஒன்றிலேயே, இந்தியாவின் கவலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரே அமெரிக்க இராஜதந்திரிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மனிதஉரிமைகள் விவகாரங்கள் சிறிலங்காவை சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும், சீனா மற்றும் ஈரானின் செல்வாக்கை பிராந்தியத்தில் திறந்து விட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர்களில் ஒருவரான ரி.எஸ்.திருமூர்த்தி என்ற அதிகாரியே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சீனாவின் தலையீட்டை முறியடிக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி திருமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment