இன்றும் மர்ம மனிதன், கிறீஸ் மனிதன் என்று பலரை தமிழர் பிரதேசங்களில் நடமாட விட்டு, பெண்களைச் சீரழிக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் செயல்படுகின்றது என்பதை பலரும் அறிவர்.
எமது மக்கள் செய்வதறியாது தள்ளாடுகிறார்கள், அங்கு நடைபெறும் இவ்வாறான தொடரும் அடக்குமுறைக்குள் பயந்து பயந்து வாழ்நாளை கழிப்பதாகவும், அதில் இருந்து தம்மை விடுவியுங்கள் என்றும் எம் தாய்மண் மக்கள் எம்மை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
அதே நேரத்தில் சிறிலங்கா அரசோ தமிழ் பகுதிகளில் அடக்கு முறைகளை செய்து கொண்டு பல உலக நாடுகளை திருப்திப்படுத்தும் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.
செப்ரெம்பர் 12 ம் திகதி கூட இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் எடுப்பதை பற்றி பல நாடுகளும், மனித நேய அமைப்புகளும் பேசிகொண்டிருக்கும் நிலையில் அதில் இருந்து விடுபட பல தொடர்புகள் ஏற்படுத்தி கொண்டும் அதற்குரிய செயல் திட்டங்களுக்கு வடிவங்களைக் கொடுத்து கொண்டிருகிறது.
அண்மையில் பிரான்சு நாட்டு வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தில் சிறிலங்காவில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் தாம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாகவும், சிறிலங்கா அரசு சர்வதேச நாடுகள் கேட்பதைப் போல சிறிலங்காவில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேச நாடுகள் அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளைச் செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
சென்ற வருடம் பிரான்சு வெளிவிவகார அமைச்சின் மனிதவுரிமை அமைப்பின் அதிகாரி சிறிலங்காவிற்கு விஜயம் செய்த போது, மகிந்த ராஜபக்சவிடம் சிறிலங்காவில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்படி கூறினார்.
இன்று மகிந்த ராஜபக்ச அவசரகால சட்டத்தை நீக்குவதாக கூறி உலக நாடுகளை திருப்திப்படுத்துவது போல், வரப்போகும் மனிதவுரிமை அமைப்பின் அமர்வை எதிர்பார்த்து செயற்பட்டுக்கொண்டிருகிறார்கள்.
அத்துடன் தாம் ஐரோப்பிய கூட்டபைப்பு ரத்து செய்த சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட கழிவை மீண்டும் பெறும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் எமது மண்ணில் எமது தாயக உறவுகள் தொடரும் அடக்குமுறைக்குள் சிக்கி எதுவும் பேச முடியாது நிற்கிறார்கள், சிறிலங்கா அரசு இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள், என்ன செய்யப்போகிறோம் நாங்கள்.?
செப்டம்பர் 7 புதன்கிழமை மாலை மூன்று மணி முதல் பிரான்சு பாராளுமன்றம் (Metro : Assemblée Nationale ligne 12) முன்றலில் பிரான்சு நாட்டு அரசிடம் சிறிலங்காவில் தொடரும் அடக்கு முறைகளை எடுத்துச் செல்வோம்.
மே 27 2009 யில் தொடங்கிய இந்த போராட்டம், ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், சிறிலங்கா அரசின் இனச்சுத்திகரிப்பு அரசியலை பிரான்சு நாட்டு அரசுக்கு கூறிக்கொண்டே இருப்போம்
செப்டம்பர் 19 ஆம் திகதி ஜெனிவா ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழர்களாக பொங்கி எழுந்து சிறிலங்கா அரசு ஒரு இனப்படுகொலை செய்யும் நாடு. அந்த நாட்டில் இருந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் குரலெழுப்ப ஜெனிவாவில் ஒன்று கூடுவோம்.
எமது மக்களின் விடுதலைக்காக நாம் போராடும் காலமிது.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை


No comments:
Post a Comment