
துக்ஷீமா என்று இக் கப்பல் அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இதனை உறுதிசெய்யமுடியவில்லை. இக் கப்பலானது இந்து சமுத்திரத்தில் அதுவும் இந்தியக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து வெவுபார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் வேவுவேலை அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை நீடித்துள்ளது. இக் கப்பல் அந்தமான் நோக்கி நகரும்போதுதான் இந்தியக் கடற்படையினர் இக் கப்பல் மேல் கண்வைத்துள்ளனர். அதுவரை அக்கப்பலை ராடர் மூலம் அவதானித்து வந்த இந்திய கடற்படையினர், ஒரு சாதாரண மீன்பிடி இழுவைப் படகைவிட அதன்வேகம் அதிகமாக இருப்பதை முதலில் கண்டறிந்தனர். பின்னர் அது நகரும் திசையையும் கண்டு சந்தேகமுற்றுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்னரே அக் கப்பல் இந்து சமுத்திரத்தில் உள்ள நிலப்பரப்புகளையும், வெப்பங்களையும் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள நீரோட்டங்களையும் வேவுபார்த்துள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நிலப்பரப்பை படம் எடுப்பதும் அதன் தோற்றம் பற்றிய தரவுகளை எடுப்பது அப்படி என்ன முக்கியம் என நீங்களை நினைப்பீர்கள். அதுமட்டுமா கடலுக்கு அடியில் உள்ள நீரோட்டங்கள் குறித்து அறிந்து பெரிசாக என்ன செய்துவிட முடியும் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதுதான் மிக முக்கியமான விடையம். இந்திய பாதுகாப்பின் முக்கியமான விடையங்களும் இவையே. இத் தகவல்களைத் தான் தற்போது இந்தியா பறிகொடுத்துள்ளது. தலையில் இந்தியா கைவைக்கும் நிலையும் தோண்றியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பில் அந்தமான் தீவுகள் மிக முக்கியமானவை. இந்தியா மீது ஏதாவது ஒரு நாடு போர் தொடுத்தால் குறிப்பாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படையினர் தமது தாக்குதலை ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமல்லாது அவ்விடம் பிராந்திய ரீதியாக மிக முக்கியமானது. அவ்விடத்தில் உள்ள கடற்பரப்பின் கீழ் மட்டத்தை தற்போது சீன உளவுக் கப்பல் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பாவித்து நிலத்தின் தோற்றத் தரவுகளை எடுத்துச் சென்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் இனி இவ்விடத்துக்கு சகஜமாக வந்துசெல்லலாம். கடலுக்கு அடியில் உள்ள மறைவிடங்கள் குகைகள் போன்ற அமைப்பை உடைய இடங்கள் எனப் பல இடங்களை சீனக் கப்பல் படம் எடுத்துவிட்டது. இனி அவ்விடம் குறித்த பல தரவுகள் அவர்கள் கைகளில் உள்ளது. அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால் தெரியாத ஒரு இடத்துக்குச் செல்வது கஷ்டம்.
தெரிந்த இடம் என்றால் நாம் சகஜமாகச் சென்றுவருவோம் அல்லவா ? சரி கடலுக்கடியில் உள்ள வெவ்வேறு வெப்ப நிலை அதனால் கடலுக்கு அடியில் காணப்படும் நீரோட்டங்கள் அதனை ஏன் சீனக் கப்பல் வேவு பார்த்தது என்று கேட்பீர்கள். அதற்கும் காரணம் உண்டு. அதாவது சீனாவின் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ரோப்பி-டோ எனப்படும் கடலுக்கு அடியில் சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கு இந் நீரோட்டம் குறித்த தகவல்கள் மிக மிக முக்கியமாகும். ஆக மொத்தத்தில் தேவையான பல தரவுகளுடன் இலங்கை கொடுத்த அடைக்கலத்தால் சீனக் கப்பல் தப்பிவிட்டது என்பதுதான் இந்தியாவின் தற்போதைய ஆதங்கமாகும். இதில் இந்திய கடற்படையினரும் கொஞ்சம் மிதமிஞ்சி நடந்துவிட்டார்களாம்.
சந்தேகத்துக்கு இடமான இக் கப்பலை கண்டறிந்த உடன் தமது போர் கப்பல்களை அல்லது வழிமறித்து தாக்குதல் நடத்தும் சிறியரக போர்க் கப்பல்களை இந்தியா அனுப்பி இருக்கலாம். அல்லது சீனக் கப்பல் இலங்கை எல்லையைத் தாண்டியவுடன் அது சர்வதேசக் கடல் எல்லையை அடையும்வரை பொறுத்திருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம். ஆனால் சந்தேகத்துக்கு இடமான இக் கப்பலை கண்டறிந்த உடனே இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டுக் கோபுரம் குறிப்பிட்ட கப்பலுக்கு எச்சரிக்கை சமிஞ்சைகளை அனுப்பியுள்ளது. இதுதான் இவர்கள் விட்ட முதல் பிழை என்று சொல்லப்படுகிறது. இவர்கள் விடுத்த எச்சரிக்கை சமிஞ்சைகளை உள்வாங்கிக் கொண்ட சீன உளவுக் கப்பல் அவசரமாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
உடனடியாகத் தப்பிக்க இலங்கையைப் பயன்படுத்தியுள்ளது. அந்தமான் தீவுகளுக்கு அருகாமையில் நின்றிருந்த இக் கப்பலைத் தாக்க இந்திய கடற்படையினருக்கு உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது. மறித்துத் தாக்கும் படகுகள் அவ்விடத்துக்கு பறந்தன. ஆனால் சீனாவின் உளவுக் கப்பல் படுவேகமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுளைந்துவிட்டது. சுமார் 1500 கடல் மைல்களை அது மிகச் சுலபமாகத் தாண்டி படுவேகமாக இலங்கைக்குள் நுளைந்துவிட்டது. இதற்கான அனுமதியை இலங்கை கொடுத்தும் விட்டது. கொழும்பு துறைமுகத்திற்குள் இக் கப்பல் பிரவேசித்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல அது அருகிலுள்ள இலங்கைக் கடற்படைத் தளத்துக்கு நேரடியாகச் சென்றுவிட்டது என்பதே உண்மையாகும்.
இதனால் இந்தியா படு கோபம் அடைந்துள்ளது. ஆனால் வாய் திறந்து பேசமுடியாது. காரணம் இந்திய கடற்படையின் அசமந்தப் போக்கு அதுமட்டுமல்லாது இலங்கை உற்ற நண்பன் எனக் கூறிவரும் இந்தியாவுக்கு இது ஒரு பேரிடி. இப்படி காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். ஒட்டு மொத்ததில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தற்போது ஆட்டங்கண்டுள்ளது எனலாம். அதனைச் சீர்செய்ய இந்தியா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் ஏற்கனவே தரித்து நிற்கும் ஏதாவது ஒரு சீனக் கப்பலில் இந்த உளவுக் கப்பல் ஏற்றப்பட்டு அது சீனா நோக்கிப் பயனித்திருக்கலாம். இல்லையேல் இன்னும் சில காலம் அது இலங்கையில் தங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருந்தாலும் இலங்கை மீது வெளிக்காட்ட முடியாத அளவு கோபத்தைப் பொத்திவைத்துள்ளது இந்தியா எனலாம்.
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்திருந்தால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்திருக்குமா ? இல்லை இலங்கையில் சீனா காலூன்றியிருக்குமா என்ற விடையங்களை இந்திய கொள்கைவகுப்பாளர்கள் ஒருமுறை மீள் பரிசீலனை செய்வது நல்லது. இதுவும் ஒருவகையில் கிணறு தோண்டப் போய் பூதம் புறப்பட்ட கதைதான்.


No comments:
Post a Comment