
நாம் போராட வேண்டிய நேரமிது!
ஒரு இனத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென்றால் அவர்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க வேண்டும். முள்ளிவாய்காலில் மனித நேயத்தை நேசிக்கும் எந்த நாடும் செய்யாத ஒரு பயங்கர இனப்படுகொலையை செய்ததோடு மட்டுமல்லாமல், மனித நேயமே அருவருக்க செய்யும் செயல்களை செய்த சிறி லங்கா அரசு, இன்றும் மாய மனிதன், கிரீஸ் மனிதன் என்று பலரை தமிழர் பிரதேசங்களில் நடமாட விட்டு, பெண்களை சீரழிக்கும் செயலில் ஈடு பட்டுகொண்டிருக்கிரதது, அதன் பின்னணியில் சிறி லங்கா ராணுவம் செயல்படுகின்றது என்பதை பலரும் அறிவர்.
எமது மக்கள் செய்வது அறியாது தள்ளாடுகிறார்கள், அங்கு நடைபெறும் இவ்வாறான தொடரும் அடக்கு முறைக்குள் பயந்து பயந்து அதில் இருந்து தம்மை விடுயுங்கள் என்று எம் தாய்மண் மக்கள் எம்மை பார்த்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் சிறி லங்கா அரசோ தமிழ் பகுதிளில் அடக்கு முறைகளை செய்து கொண்டு பல உலக நாடுகளை திருப்தி படுத்தும் செயல்களை செய்து கொண்டிருகிறது.
செப்டம்பர் 12 ஆம் திகதி கூட இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வில் சிறி லங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் எடுப்பதை பற்றி பல நாடுகளும், மனித நேய அமைப்புகளும் பேசிகொண்டிருக்கும் நிலையில் அதில் இருந்து விடுபட பல தொடர்புகள் ஏற்படுத்தி கொண்டும்அதற்குரிய செயல் திட்டங்களுக்கு வடிவங்களை கொடுத்து கொண்டிருகிறது.
அண்மையில் பிரான்சு நாட்டு வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தில் சிறி லங்காவில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் தாம் உண்ணிப்பாக கவனித்து கொண்டிருப்பதாகவும், சிறி லங்கா அரசு சர்வதேச நாடுகளின் கேட்பதை போல சிறி லங்காவில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று, இல்லையேல் சர்வதேச நாடுகள் அதை செய்வதற்கான நடவேடிகைகளை செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
சென்ற வருடம் பிரான்சு வெளிவிவகார அமைச்சின் மனிதவுரிமை அமைப்பின் அதிகாரி சிறி லங்காவிற்கு விஜயம் செய்த போது, மகிந்த ராஜபக்சே விடம் சிறி லங்காவில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் படி கூறினார்.
இன்று மகிந்த ராஜபக்சே அவசர கால சட்டத்தை நீக்குவதாக கூறி உலக நாடுகளை திருப்தி படுத்துவது போல் , வரபோகும் மனிதவுரிமை அமைப்பின் அமர்வை எதிர்பார்த்து செயல் பட்டுகொண்டிருகிரார்கள்.
அத்துடன் தாம் ஐரோப்பிய கூட்டபைப்பு ரத்து செய்த சிறி லங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட கழிவை மீண்டும் பெரும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் எமது மண்ணில் எமது தாயக உறவுகள் தொடரும் அடக்கு முறைக்குள் சிக்கி எதுவும் பேச முடியாது நிற்கிறார்கள், சிறி லங்கா அரசு இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாங்கள், என்ன செய்யப்போகிறோம் நாங்கள்.?
செப்டம்பர் 7 புதன்கிழமை மாலை முன்று மணி முதல் பிரான்சு பாராளுமன்றம் (Metro : Assemblée Nationale ligne 12) முன்றலில் பிரான்சு நாட்டு அரசிடம் சிறி லங்காவில் தொடரும் அடக்கு முறைகளை எடுத்து செல்வோம். மே 27 2009 யில் தொடங்கிய இந்த போராட்டம், ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்து நடைபெற்று கொண்டிருக்கும் இந்த போரரட்டம், சிறி லங்கா அரசின் இனச்சுத்திகரிப்பு அரசியலை பிரான்சு நாட்டு அரசுக்கு கூறிக்கொண்டே இருப்போம். செப்டம்பர் 19 ஆம் திகதி ஜெனிவா ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழர்களாக பொங்கி எழுந்து சிறி லங்கா அரசு ஒரு இனப்படுகொலை செய்யும் நாடு அந்த நாட்டில் இருந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் கூற ஜெனிவாவில் ஒன்று கூடுவோம்.
எமது மக்களின் விடுதலைக்காக நாம் போராடும் காலமிது.
- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை-
- தொடர்பு: 06 58 58 92


No comments:
Post a Comment