யேர்மனி Bonn நகரத்தை அண்டிய Siegtal கிராமத்தில் நடைபெற்ற இடது சாரி கட்சியின் பிரச்சார நிகழ்வில் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் திரு Paul Schäfer அவர்களும் கலந்து கொண்டார்.திரு Paul Schäfer அவர்கள் யேர்மன் இடது சாரி கட்சியின் பாதுகாப்பு சபையின் பேச்சாளர்.
யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவைக்கும் மற்றும் Bonn நகரத்தின் இடது சாரி கட்சிக்கும் தொடர்பாளராக விளங்கும் திரு கோகுலன் அவர்களால் யேர்மன் மக்கள் அவையின் சார்பில் ஈழத்தமிழர் நிலைமை குறித்தும் அத்தோடு சிறப்பாக தமிழ் மக்கள் மீது இறுதி யுத்தத்தில் மிக கொடுமையாக போர்குற்றம் புரிந்து தற்சமயம் யேர்மனியின் மற்றும் சுவிஸ், வத்திக்கானின் துணைத்தூதுவராக பணியில் அமர்ந்து புலம்பெயர் நாடுகளிலும் நாசகார செயல்களில் ஈடுபடும் மேஜர் ஜெனரல் ஜெகத் டியாஸ் போர்குற்றவாளி குறித்தும் மனு ஒன்று திரு Paul Schäfer அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகள் குறித்தும் பேசப்பட்டது .அவ் வேளையில் அதற்கு சாட்சியாக பிரித்தானிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி "இலங்கையில் கொலைக்களம் "மற்றும் Ban Ki-moon அவர்களின் நிபுணர்குழுவின் ஐ நா அறிக்கையையும் சுட்டிக் காட்டி உரையாடப்பட்டது.
அனைத்தையும் மிக அவதானமாக உள்வாங்கிய திரு Paul Schäfer அவர்கள் தனது கட்சி பாராளுமன்றத்தில் ஜெகத் டியாஸ் விடையமாக ஏற்கனவே ஆளும்கட்சியிடம் கேள்வி தொடுத்ததாகவும் அதற்கு அவர்கள் நிராகரித்தே பதில் அளித்தார்கள் எனவும் ,ஆனால் தனது கட்சி தொடர்ந்தும் ஜெகத் டியாஸ் விடையம் சார்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகும் விளக்கமளித்தார்.
வைகாசி மாத இறுதியில் யேர்மன் பசுமை கட்சியும் போர்குற்றவாளி ஜெகத் டியாஸ் சார்ந்த கேள்விகளை பாராளுமன்றத்தில் கேட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment