வேலூர் சலவன்பேட்டை ராமசாமி தேசிக தெருவைச் சேர்ந்தவர் தனஞ்செழியன் (42), டீ மாஸ்டர். கடந்த 17ம்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளார்.
இதனால் தனஞ்செழியனுக்கும் அவரது மனைவி வேம்புலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வேதனை அடைந்த தனஞ்செழியன், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தடுத்து, சமாதானப் படுத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் தற்கொலை முடிவை கைவிட்டார். பின்னர் அவரை குளிக்கும்படி வீட்டில் இருந்தவர்கள் கூறினர்.
ஆனால் குளிக்காமல் மண்ணெண்ணெய் படிந்த உடலுடன் உட்கார்ந்திருந்த தனஞ்செழியன், சிறிது நேரம் கழித்து, பீடி குடிக்க நெருப்பை பற்ற வைத்துள்ளார்.
இதனால் அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. பலத்த தீக்காயம் அடைந்த அவரை வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனஞ்செழியன் இறந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment