
லண்டனிற்கு எதிர்வரும் 3ம் திகதி வரவிருக்கும் கொலைவெறியன் மகிந்த ராசபக்சேவை விரட்டியடிக்க புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றார்கள். இதுவரை நீங்கள் தயாராகவல்லை என்றால் உடனடியாக உங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுங்கள்.
புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டார்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கதையளக்கும் சிங்கள அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்துவருகின்றது. தனது முப்படைகளையும் சிங்களம் அத தீவிரமாக பலப்படுத்தி வருகின்றது.
ஆம், இன்னும் போர் ஓயவில்லை….! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனை கொன்றுவிட்டோம் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கூக்குரல் இட்ட சிங்கள அரசு தனது இராணுவ வலிமையினை முன்னரைபார்க்க பன்மடங்கு உயர்த்துவதன் காரணம் உண்மையான போரை இனிமேல்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையினை இராசபக்சே கும்பல் உணர்ந்துள்ளதால்.
களத்தில் போர் நிச்சயம் உண்டு. ஆனால் புலத்தில் போர்களத்தை ராசபக்சே திறந்துள்ளான். கடந்தமுறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்து வாங்கிக்கட்டிக் கொண்டு ஓடிய மகிந்த மச்சான் மீண்டும் வரும் 3ம்திகதி லண்டன் வருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களது வீராவேசத்தை பரீட்சிப்பதற்கான களத்தை உருவாக்கியுள்ளான்.
இனத்தை அழித்தவனிற்கே அழிக்கப்பட்ட இனத்தின் அக்கினிக்குஞ்சுகளை எதிர்கொள்ள துணிவிருக்கின்றது என்றால் மொத்தமா இலட்சம் உறவுகளைப் பறிகொடுத்த நாம் ஒதுங்கியிருக்கலாமா…!?
ராசபக்சேவின் லண்டன் வருகைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணமிருக்க வருகின்றான் என்ற செய்தி புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களது காதுவழியே சென்று மூளையை சென்றடைந்த அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் உடலில் பெரும் சிலிர்பினை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதே தாம் வேலை செய்யும் நிறுவனங்களில் விடுப்பிற்கான கடிதங்களை பலர் கொடுத்துள்ளதாகவும் அன்றைய காலகட்டத்தில் ஏற்கனவே முடிவான அதிமுக்கிய வேலைகளைக் கூட தள்ளிவைத்துவிட்டு அந்த நாட்களில் லண்டன் செல்வதற்கு எமது உறவுகள் தயாராகிவரும் செய்தி எமது காதுகளை குளிர்விப்பது மட்டுமல்லாது பெருத்த நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளிற்கு சத்திர சிகிச்சைக்கு அந்த நேரத்தில் முன்னனுமதி பெற்றிருந்த தந்தை ஒருவர் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒருவாரம் சத்திரசிகிச்சைக்கான காலத்தை பிற்போட்டு குடும்த்துடன் லண்டனில் ராசபக்சேவை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளார் என்ற செய்தி உண்மையில் போர் இன்னும் ஓயவில்லை என்பதையும் வாய்ப்புகள் வசமாகும் போது தமிழர்கள் எல்லோரும் புலிகளாய் எழுவார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
குடும் நிகழ்வு ஒன்றிற்காக விடுப்பு எடுக்க இருந்த இன்னொருவர் அதற்கு விடுப்பு எடுத்தால் லண்டன் செல்ல முடியாது என்பதால் அதனை கைவிட்டு தனது விடுப்புக் காலத்தை ராசபக்சேவிற்கான போர்க் காலத்திற்காக சேமித்து லண்டன் செல்வதற்கு ஆய்தமாகியுள்ளார்.
இது போன்று எத்தனையோ உறவுகள் லண்டன் வரும் ராசபக்சேவுக்கு நேருக்கு நேர்நின்று தமிழர்களின் நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கும் விடுதலை நெருப்பின் வீரியத்தை காட்டுவதற்கு தயாராகிக் கொண்டுள்ளார்கள்.
லண்டனில் உள்ள உறவுகள் பெரும் தயார்படுத்தலில் ஈடுபட்டிருக்க ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்கள் லண்டன் போர்களம் நோக்கி புறப்படத் தயாராகிக் கொண்டுள்ளார்கள். இதுவரை லண்டன் செல்லும் எண்ணமில்லாது இருந்தவர்கள் ஏற்பாடுகள் செய்யாது இருந்தவர்கள் இனி என்ன ஆகப்போகின்றது என்ற விரக்தி நிலையில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் வாய்ப்புள்ள அனைவரும் உடனடியாக லண்டன் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை இப்போதே தொடங்குங்கள்.
ஒரு நாட்டின் அதிபரை சிறுபான்மை இனத்தவர்கள் அதுவும் அன்னிய மண்ணில் இருந்து விரட்டி அடித்தார்கள் என்ற செய்தி உலகை எம்பக்கம் திருப்பும். கடந்தமுறை விரட்டி விரட்டி பின்னங்கால் பிடரியில் பட கொலைவெறியனை விரட்டியபோதே இராசதந்திர வட்டாரத்தில் பெரும் பரபரப்புடன் நோக்கப்பட்டிருந்தது.
தற்போது உலகம் தமிழர்களின் குரலாக ஜெனீவாவில் கொலைகாரன் ராசபக்சேவின் சட்டையினை பிடித்து கேள்விகேட்க முற்பட்டுள்ள புறச்சூழலில் மகிந்த ராசபக்சேவினை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் விரட்டி அடித்துவிட்டார்கள் என்றால் அது மிகப்பெரும் வரலாறாகும்.
“போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப தற்போது எமது களம் லண்டன். தமிழினத்தின் எதிரியை பழிதீர்க்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
இந்த சந்தர்பத்தினை தவறவிடாது ஒன்று பத்தாக அல்லாது ஆயிரம் பல்லாயிரமாக திரண்டு விரட்டியடிப்போம் லண்டனிற்கு வாருங்கள். என விடுதலைக் குரலெழுப்பி அழைக்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


No comments:
Post a Comment