
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிக் கடற்கரையோடு இருந்த சிறிய கடற்படை முகாமினை பெருந் தொகையான நிலப்பரப்பினை உள்ளடிக்கி விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் காலத்தில் பெரும் பங்கு வழங்கிய முகாமாகக் கூறப்படும் இம் முகாம் விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்கான றேடர் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுனாமித் தாக்கத்திற்குப் பின்னர் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே
மக்களுடைய குடிமனைகள் அமைக்கமுடியும் என்னும் நடைமுறை கொண்டுவந்ததன் பின்னர் பெரும் பகுதியான நிலப்பரப்பினை கடற்கரையோடு விட்டுவிட்டு அப் பகுதி மக்கள் தொலைவான இடத்திற்குச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறிலங்கா கடற்படையினர் சிறிய அளவிலாக இருந்த கடற்படை முகாமினை பெருந்தொகையான நிலப்பரப்பினை உள்ளடக்கி பாரிய அளவில் விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி விஸ்தரிப்புச் செய்யப்படும் கடற்கரைப் பகுதிகளில் அப் பகுதி மீனவர்கள் கடற்றொழிலில்
ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரில் குறிப்பாக சிறீலங்கா கடற்படையினர் தங்கள் நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment