
சின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப்பு படத்தின் கலெக்சன் அனைத்தையும் துடைத்தெறிந்திருக்கிறது.
லாஜிக்கே இல்லாத டப்பா படமான கலகலப்பு காமெடி என்னும் விட்டமினில் கலெக்சனை அள்ளிக் கொண்டிருக்கிறது. கன்ஸ்யூமர் உலகில் காமெடிதான் காப்பாற்றும் என்பதை புரிந்து கொண்டவர் கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு கதை விவாதத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். நஷ்டக் கணக்கு எழுதி வந்த யு டிவி நிறுவனத்துக்கும் இப்போதுதான் ஜாக்பாட் அடித்திருக்கிறது. உப்பு பெறாத படத்தையே தயாரிக்க தயங்காதவர்கள் டப்பு தேறும் விஷயத்தை விடுவார்களா என்ன.
அக்டோபரில் படப்பிடிப்புக்கு கிளம்புறோம் என்று அட்வான்ஸாகவே அறிவித்திருக்கிறார்கள்.
மறுபடியும் உள்ளத்தை அள்ளித்தா ட்ரெண்ட் தொடங்கிடுச்சா... கடவுளே.


No comments:
Post a Comment