யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் பகிஷ்கப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைச் சூழ பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியிலும் அப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந் தாக்கப்பட்டதைத் கண்டித்து கடந்த சில தினங்களாக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.
இந் நிலையில், மாணவர்கள் வன்றைச் சம்பவங்களில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக பல்கலைக்கழக சூழலில் சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமக்கான பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment