
யாழ். வடமராட்சியின் வல்வெட்டித்துறைப் பகுதியில் இலங்கையின் குடியரசு யாப்பினை இளைஞர் குழுவொன்று தீயிட்டு கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இலங்கையின் அரசியல் யாப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 40 வருடம் நிறைவு பெற்ற நேற்று இடம்பெற்றுள்ளது.
தழிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை வான் ஒன்றில் வந்த இளைஞர்கள் குழுவினர் யாப்பினை தீட்டு கொழுத்திவிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பிச் சென்றதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் வடமராட்சி பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment