
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அதிகளவான தொலைபேசி விற்பனை நிலையங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானவை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
செல்லிடப் பேசிகள் மற்றும் செல்லிடப் பேசி மீள் நிரப்பு அட்டை விற்பனை நிலையங்கள் 99 வீதமானவற்றின் பூரண உரிமை புலிகளின் வசம் காணப்படுகின்றது. அண்மையில் ஜெனீவா சென்றிருந்த போது இந்த விடயம் தெரியவந்தது.
அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிகள் அனைவரும் இந்த விற்பனை நிலையங்களில் செல்லிடப் பேசிகளையும், மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்வனவு செய்துள்ளனர்.
தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளனர். ஜெனீவா செல்வோர் செல்லிடப்பேசி, மீள்நிரப்பு அட்டை போன்றவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
எனினும், அவ்வாறு கொள்வனவு செய்வதன் மூலம் நாம் புலிகளுக்கு உதவி வழங்குகின்றோம். சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்த போது நான் தொலைபேசிகளை பயன்படுத்தவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment