
இவர் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களால் 31 மே 2004 ஆம் நாளன்று மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த அற்புதமான ஊடகச் சமராடி, 20 வருடகாலமாக வீரகேசரியில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றியவர். நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவராகவும் பணியாற்றினார்.
விடுதலைப் புலிகளின் அனுதாபி என்கின்ற ஒரே காரணத்தால் இவரின் இன்னுயிர் ஒடுக்குமுறையாளர்களால் பறிக்கப்பட்டது.
'இராணுவத்திற்கெதிரான செய்திகளை வெளியிட்டால் கைது செய்யப்படுவீர்' என்கிற அச்சுறுத்தலை, ஜூன் 17 . 2001 அன்று இவரை விசாரணைக்கு அழைத்த இலங்கை இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் விடுத்ததாக, 'ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு' [CPJ ] தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இராணுவத்தின் தொடர் அச்சுறுத்தலையும் மீறி ,தனது ஊடகப் பணியை நேர்த்தியானவகையில் முன்னெடுத்த நடேசன் , கருணாவின் பிரிவோடு முதல் களப்பலியான தமிழ் தேசிய ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் ஊடகவியலாளர் மீதான அரசின் ஒடுக்குமுறை நிறுத்தப்படவில்லை. மக்களின் செய்தியறியும் அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட நிலையில் ,ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், பலர் நாட்டைவிட்டு தப்பி ஓடுகின்றார்கள்.
கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி இன்றுவரை நிலைநாட்டப்படவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் ,சுதந்திரமாக உலவும் நாட்டில், ஊடக சுதந்திரம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.


No comments:
Post a Comment