
இலங்கையின் குடியரசு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
பிரித்தானிய காலணித்துவ ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
பிரித்தானிய மஹாராணியின் ஆட்சியில் இருந்து இலங்கை பூரண சுதந்திரமடைந்த தினமாக குடியரசு தினம் அமைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூறும் வகையிலேயே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு முறையின் கீழ், இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும், 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய யாப்பின் பிரகாரமே நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது.
இலங்கையின் குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து நாட்டின் இறைமையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாக புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Post a Comment