ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை சிறைக்குள்ளேயே எழுதினார். தற்போது வெளியாகி இருக்கும் தேர்வு முடிவில் பேரறிவாளன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.மொத்தமாக அவர் பெற்ற மதிப்பெண் 1096. தமிழ்ப் பாடத்தில் 185 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பேரறிவாளன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் பேரறிவாளனுக்கு வாழ் த்து தெரிவித்திருக்கிறார்கள்.
சிறைத்துறைஅதிகாரி டோக்ராவும்பேரறிவாளனின் தேர்ச்சிக்கு வாழ் த்து தெரிவித்திருக்கிறார்.
அடுத்தபடியாக இதழியல் சம்பந்தமான படிப்பை படிக்கும் திட்டத்தில் இருக்கும் பேரறிவாளன் திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலமாக அதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்.
தூக்கின் நிழலில் வாடினாலும், விடாப்பிடியான நம்பிக்கையோடு படித்து, தேர்ச்சி பெற்றிருக்கும் பேரறிவாளனை நாமு ம் வாழ்த்துவோம்!



No comments:
Post a Comment