தான் உயிருக்கு உயிராக நேசித்த சுதன், நிரோஜினி எனும் இன்னொரு பெண்ணை லவ் பண்ணுகிறான் என்று தெரிந்ததும், அகல்யா ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்? அவளது மனதில் ஏன் ஆனந்தம் பொங்க வேண்டும்?? ஒருவேளை அகல்யாவின் மனோநிலை பாதிக்கப்பட்டு விட்டதா??
நிரோஜினி யார்?
இனி............,
அகல்யாவின் உற்சாகம் ரமாவுக்கும் மகிழ்சியைக் கொடுத்தது! சற்று முன்னர் வரை ரமாவின் மனதைப் பிடித்து உலுக்கிய குற்ற உணர்ச்சி தணிந்திருந்தது! அகல்யா, சுதனை விரும்புவது தெரியவந்ததும், ரமா செய்த முதல் வேலை, சுதனுக்குப் போன் பண்ணி “ அகல்யா உங்களைக் காதலிக்கிறாள்” என்று சொன்னதுதான்!



No comments:
Post a Comment