
கமலின் விஸ்வரூபம் தமிழ், இந்தி இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்து இந்தியில் டப் செய்யாமல் தமிழுக்கு ஒருமுறையும், இந்திக்கு இன்னொருமுறையும் என்று இருமுறை ஷூட் செய்திருக்கிறார் கமல். இந்தியில் படத்தின் பெயர் விஸ்வரூப்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விஸ்வரூபத்தை வெளியிட கமல் விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவில் இந்திப் பதிப்பான விஸ்வரூப்பை வெளியிடுகிறார்.
ஆஸ்கருக்கு அடுத்து ஐஃபாவைதான் அதிக ரசிகர்கள் தொலைக்காட்சியில் ரசிப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இந்த விழாவில் படத்தை திரையிட்டால் அனைவரையும் வெகு சுலபமாக அது சென்றடையும். அதனால்தான் கமல் ஐஃபாவை தோந்தெடுத்ததாகக் கூறுகிறார்கள்.
வரும் ஜூன் 8ஆம் தேதி விஸ்வரூப் சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.


No comments:
Post a Comment