தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஈழத்தில் நாங்கள் இன்றும் ஏங்கித்தவிக்கின்றோம், புலம்பெயர் தமிழ் உறவுகளே எங்களுக்கான சுதந்திர உரிமையினை பெற்றுத்தாருங்கள் என தாயகத்திலிருந்து புலம் பெயர் உறவுகளுக்கு அறைகூவல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.அடக்குமுறை எங்கு நடக்கிறதோ அந்த அடக்கு முறைக்கான எதிர்பலைகளும் அங்கு இருக்கும் அந்தவகையில்தான் நான் அடக்கு முறைக்குள் இருந்துகொண்டு எனது எதிர்பலைகளை காட்டமுடியாத சூழ்நிலையில் எனது எழுத்து மடலினை அனைத்து புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் விடுக்கின்றேன்.
இன்றைய நிலையில் ஈழத்து தமிழ்மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற எழுச்சி நிலைப்பாட்டினை புலம்பெயர் தமிழ்மக்கள்தான் கொண்டிருக்கின்றார்கள், எங்களை வைத்து பகடைக்காய்கள் நகர்த்தும் அரசியல்வாதிகள்தான் தமிழ்மக்களின் அரியல் வாதிகளாக இருக்கின்றார்கள்.
லண்டனில் இருந்தும் பிரான்சில் இருந்தும் தமிழ்மக்களுக்கான நடைபயணத்தினை மேற்கொண்டு ஈழத்தில் வாழும் எங்களின் இறுதி தீர்வினை பெற்றுத்தாருங்கள். வெளிநாட்டில் வாழும் எம் சககோதரங்களே ஜெனீவா நோக்கி நீங்களும் திரண்டு சென்று முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைந்த உறவுகளின் கனவினை நனவாக்க விரைந்து செயற்படுங்கள்.
எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத நெஞ்சத்துடன் உறுதியாக இந்த மடலினை எழுதி எந்தனையோ இடர்களுக்கு மத்தியில் உங்கள் விழிகளுக்கு கிடைக்கின்றது. இனப்பற்றாளனாக வாழ்ந்துகொண்டும் அதனை காட்டமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.
எழுச்சிகொண்ட தமிழ்மக்கள் புலம்பெயர் மண்ணில் இருக்கின்றார்கள் என்பதை செய்திகள் ஊடாக அறிந்துகொண்டு அவர்களின் எழுச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
கொண்ட இலட்சியம் குன்றிடாததோர் கொள்கைவீரனின் காலடிமண்ணிலே நின்றுகொண்டொரு கூக்குரல் இடுகின்றேன்.
நிச்சயம் தீர்வு பெற்றுத்தருவீர்!
தாயகத்திலிருந்து சாணாக்கியன்


No comments:
Post a Comment