இந்திய தேசமானது சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்க சர்வதேசத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் உலக நாடுகள் பல இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை உணர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக பல்வேறுபட்ட அழுத்தங்களை பிரயோகிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவும் எமக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்று நீதிக்கான நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இன்று ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வலியுறுத்தி மார்ச் 5ம் திகதி நடைபெற இருக்கும் எழுச்சி கொண்ட பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
ஐரோப்பா தழுவிய ரீதியில் எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டி மார்ச் 5ம் திகதி நடைபெற இருக்கும் ஒன்றுகூடலிற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாட்டினுடைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, நீங்கள் உங்கள் நாட்டுத் தழிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிராந்திய செயற்பாட்டாளர்களோடு தொடர்பு கொண்டு இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


No comments:
Post a Comment