இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு பிரதியுபகாரமாக சிறிலங்கா அரசு எவ்விதமான செயற்பாட்டினை மேற்கொள்ளப் போகின்றது என்பதே முக்கியமான கேள்வி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெருக்கடிமிக்க இன்றைய தருணத்தில், தமிழர் தரப்புகளிலிருந்து பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானமானது, தமிழர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகக் கருத முடியும். ஆனால் இந்த நல்லெண்ண முயற்சியை விழலுக்கு இறைத்த நீராக சிறிலங்கா அரசு மாற்றிடக் கூடாது என்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment