ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனமொன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டளவில் பெருமளவான ஆட்கடத்தல் சம்பவங்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள இக்கூட்டத்தொடரில் இது குறித் தஅறிக்கை சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சந்தர்ப்பம் அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment