இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளது. சுமார் 23 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கின்றனர் என்ற செய்திகள் பரவலாக அடிபடிம் வேளை இது. ஆபிரிக்க நாடுகளில் ஆதரவுதேடி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தென்னாபிரிக்கா பயணமானார். ஆனால் கொழும்பில் மகிந்தர் படு ஜோராக காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறார் என அதிர்வு இணையம் அறிகிறது. கொழும்பு நாலந்தா கல்லூரியில் விளையாட்டரங்க தொகுதியினை மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை திறந்துவைத்தார்.
இதன்போது மகிந்தர் கிரிகெட் விளையாடியுள்ளார். பார்த்துப் பார்த்துப் போடப்பட்ட மிக சுலபமான பந்துகளை அடித்த மகிந்தர் இறுதியா மட்டையை அதிபரின் கைகளில் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.


No comments:
Post a Comment