
இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்க சிறீலங்காவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ராபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சிறீலங்காவுக்கு தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் பன்னாட்டு மன்னிப்புச் சபை உள்ளிட்ட 37 அமைப்புகள் ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு, முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், சிறீலங்காவுக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என சிறீலங்கா அமைச்சர்கள் குழு, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையானது உலகில் உள்ள பிற நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்தால் ஜக்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை செயற்படுத்த வாய்ப்பு ஏற்படும் என சிறீலங்கா குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறீலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இடமளித்தால். இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட வாய்ப்பு ஏற்ப்படும் என இணைய ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவையெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


No comments:
Post a Comment