
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின போது, சாவகச்சேரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதன்பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு அடுத்த மாதம் 6ம் நாள் யாழப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் அன்று அரசியல்தீர்வுத் திட்டம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை அங்கு நிகழ்த்தக் கூடும் என்றும் சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


No comments:
Post a Comment