விடுதலைப் புலிகளை தாம் போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது. கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து இன்று (31) தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.படு பயங்கரமான ஆர்.டி.எக்ஸ் என்னும் வெடிபொருளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அங்கி விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் ரகத்தில் இருந்து மாறுபட்டவை என்றும் அவை இலங்கைக்கு வேறுவழிகளில் தருவிக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் மேலதிகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை விடுதலைப் புலிகளுடையது என்றும் அவர்களே அவற்றைக் கடத்தி வந்ததாகவும் இலங்கை அரசு கூறிவந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பாக பெரும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அல்லாத சிங்கள சக்தி ஒன்று தென்னிலங்கையில் செயல்பட ஆரம்பித்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிர்வு


No comments:
Post a Comment