பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை 11 ஆண்டுகள் கழித்து நிராகரித்தது சட்டவிரோதமானது என்பதால் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது மூவரின் கோரிக்கை.
மூவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதியன்று தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் மூவரின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மூவரின் தூக்கு தண்டனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மூப்பனார் பேரவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கின் விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது,
உச்சநீதிமன்றத்தில் மூவரின் தூக்கு தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது.


No comments:
Post a Comment