
சீமானை கைது செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் டி.ஜி.பி அலுவலகம் முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கவும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும் இளைஞர் காங்கிரசார் நேற்று டி.ஜி.பி அலுவலகம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சீமானுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கோஷமிட்டனர். இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் பொலிசார் வந்து போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. கைது செய்யப் போவதாக கூறினார்.
இதனால் பொலிசாருடன் இளைஞர் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்க 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜ், ராம்குமார், ஆனந்த், அப்பாஸ், விஜய் இளஞ்செழியன் ஆகியோர் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் யுவராஜ் கூறியதாவது: சீமானை கைது செய்ய கோரி ஏற்கனவே பொலிஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலையில் 3 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் சீமான் நடத்தும் பொது கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தோம். அவரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அப்படி எடுக்கவில்லை என்றால் சீமானுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.


No comments:
Post a Comment