ஆதி பகவானிலிருந்து ஒருவழியாக உருவிக் கொண்டு ஓடிவிட்டார் நீது சந்திரா. அடுத்து இவர் நடிப்பது ஒரு கிரேக்கப் படத்தில்.
மதூர் பண்டார்கரின் ட்ராஃபிக் சிக்னல் படத்தின் மூலம் தெரிய வந்தவர்தான் நீது சந்திரா. அதில் ஹோம்லி வேடம். ஆங்கிலப் பத்திரிகையின் அட்டையில் லெஸ்பியன் போல் பின்னிப் பிணைந்து போஸ் கொடுத்த பிறகு நீதுவின் இமேஜே மாறிப் போனது. எக்குதப்பான வேடம் என்றால் நீதுதான் முதல் சாய்ஸ். கிரேக்கப் படமும் அந்த அடிப்படையில்தான் கிடைத்திருக்கும் போல.
மூன்று ஆண்கள் நீதுவை ட்ரை பண்ணுவதுதான் கிரேக்கப் படத்தின் கதையாம். படத்தின் பெயர் ஹோம் ஸ்வீட் ஹோம். 8 ஆம் தேதி சைப்ரஸில் தொடங்கயிருக்கும் படப்பிடிப்புக்காக இன்று பிளைட் ஏறுகிறார் நீது.
படம் தமிழில் டப் செய்யப்படுமா?
No comments:
Post a Comment