பில்லா 2 படத்தின் கேரள உரிமை மட்டும் இதுவரை விற்கப்படாமல் இருந்தது. அதையும் ஒரு சாதனை தொகைக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர்.
பில்லா 2-வின் திரையரங்கு மற்றும் பிற உரிமைகள் 41.19 கோடிகளுக்கு விற்கப்பட்டது. கேரள உரிமை மட்டும் இழுபறியில் இருந்தது. தற்போது அந்த உரிமையை சகாரா என்டர்டெயின்மெண்டும், மணி ட்ரீ என்டர்டெயின்மெண்டும் வாங்கியுள்ளன.
கேரளாவைப் பொறுத்தவரை விஜய்க்கும், சூர்யாவுக்குமே அதிக மார்க்கெட். இதனை மங்காத்தா மாற்றியமைத்தது. படம் அங்கு சூப்பர்ஹிட். பில்லா 2 விற்கு கேரளாவிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் படத்தின் உரிமைக்கு 1.5 கோடி தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்த அஜீத் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனதில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.
No comments:
Post a Comment