
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜி.சி.ஈ உயர்தரத்தை பூர்த்தி செய்யாதவர் ஆவார் என்பதை வெளிப்படுத்தி உள்ளது விக்கி லீக்ஸ்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணத்தில் மஹிந்தர் உயர் தரத்தை பூர்த்தி செய்யாதவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அம்பாந்தோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான கல்வித் தகைமைகள் இல்லாமல் இலங்கைச் சட்டக் கல்லூரியில் பயிலலாம் என்று அன்றைய நீதி அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை சாதகமாக பயன்படுத்தி சட்டக் கல்லூரிக்குள் புகுந்து 1974 ஆம் ஆண்டு சட்டத்தரணி ஆனார் என்றும் ஆவணத்தில் உள்ளது.


No comments:
Post a Comment