உலகின் முதல் 3 டி தொலைக்காட்சி சேவை சீனாவில் சோதனை முறையில் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த 3 டி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளன. ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த 3 டி சேவை தினமும் 13.5 மணி நேர நிகழ்ச்சிகளை சோதனை முறையில் ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்த தொலைக்காட்சி சேவையை சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறது. வரும் ஜனவரி 23ம் திகதி சீனாவில் வசந்த விழாக் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் இந்த 3டி சேவை அதிகாரபூர்வமாக ஒளிபரப்பப்படும்.
முப்பரிமாண முறையில் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் இந்த 3டி சேவை உலகின் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட 3டி தொலைக்காட்சி சேவை என்ற பெருமையைப் பெறுகிறது.
No comments:
Post a Comment