தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் டில்லி அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் வழங்க மறுத்துள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யும் நோக்கில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா விஜயம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் மூன்று நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை முன்வைத்தால் மட்டுமே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment