
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் சிறீலங்காப்படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக யாழ் நகரினை அண்டியபகுதிகளில் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் சகல ஊர்திகளும் மறிக்கப்பட்டு சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கின்றார்கள். மாலை வேளைகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன
காரணங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கையினால் பயணம் மேற்கொள்ளம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் படையினரின் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில்தான் யாழ்ப்பாணத்தில் திருட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 47Share
No comments:
Post a Comment