
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமைக்காக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ கடுமையாகச் சாடியுள்ளார்.
"இந்தியாவின் ஹெட்லைன் ரூடே" தொலைக்காட்சிச் சேவைக்கு வழங்கிய பேட்டியில், சிறுபான்மையினருக்கு எந்திதமான அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்.
"தமிழர்களின் நல்களில் அவர்களுக்கு அக்கறையிருந்தால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோருவது அர்த்தமற்றது" எனவும் தெரிவித்த கோதாபாய, "தமிழர்களுக்கு அதன் 5லமாக என்ன கிடைத்துவிடப் போகின்றது?" எனவும் கேள்வி எழுப்பினார்.
இலங்கைப் போரின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கைத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்துவெளியிட்ட போதே கோதாபாய இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார். "இந்தத் தீர்மானத்தை தன்னுடைய அரசியல் நலன்களுக்காகவே ஜெயலலிதா கொண்டுவந்திருக்கின்றார்" எனத் தெரிவித்த கோதாபாய, "இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் நாம் இலங்கையர்கள். எமது நாட்டுப் பிரஜைகளையிட்டு மற்ற எவரையும்விட நாமே அதிகளவுக்குக் கவலைப்படுகின்றோம்" எனவும் குறிப்பிட்டார்.
"இந்தத் தீர்மானத்தை உண்மை நிலைமைகள் பற்றிய தகவல்கள் எதனையும் தெரிந்திருக்காத நிலையிலேயே ஜெயலலிதா கொண்டுவந்திருக்கின்றார்" எனக் குறிப்பிட்ட கோதாபாய, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் ஜெயலலிதா உண்மையாகவே அக்கறை கொண்டவராக இருப்பின் இந்திய மீனவர்கள் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு வந்து மீள்பிடிப்பதைத் தடுக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.
"இந்த விவகாரத்தை எடுத்தால் அவர்கள் தமிழர்களின் நலன்களையிட்டுப் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களின் நலன்களையிட்டுப் பேசுபவர்கள் உண்மை நிலைமையை அறியும் போது வாயை மூடிக்கொள்கின்றார்கள். ஜெயலலிதா தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளவராக இருந்தால் இதனைத்தான் முதலில் செய்ய வேண்டும்"
உலகத்திலுள்ள சிலர் தம்மை சர்வதேச சமூகம் எனக் கூறிக்கொள்ள முடியாது. உலகின் பல நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனா, இந்தியா, பாகிஸ்தான் என்பவற்றைவிட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்காசியாவிலுள்ள பல நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன: எனவும் கோதாபாய தெரிவித்தார். தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட அவர், தற்போதுள்ள அதிகாரப்பரவலாக்கலை விட மேலதிகமாகச் செல்ல முடியாது எனக் கூறினார்.
"தற்போதைய அரசியலமைப்பு நாம் ஒன்றாக வாழ்வதற்குப் போதுமானதாக இருக்கின்றது. இதனைவிட வேறு எதுவும் தேவையாக இருப்பதாக நான் கருதவில்லை. இதன் மூலமாக தீர்வு ஒன்றைக் காண முடியும் என்பதே எனது கருத்து. இப்போது புலிகள் இல்லை. அதனால் இதற்கு மேல் எதுவம் தேவை இல்லை என்பதே எனது கருத்து" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment