தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசத்தின் குரல் என்று உலகத்தமிழீழ மக்களால் என்றும் அழைக்கப்படும் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணாவின் 5ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் சேர்மனியில் வூப்பெற்றால் நகரில் மிகவும் எழுச்சியுடன் இதயசுத்தியுடன் நடைபெற்றன.
நிகழ்வில் எங்கள் மாவீரன் அண்ணாவுக்கு பொது ஈகச்சுடரை சேர்மனியத் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வன் சிந்துயன் முருகையா ஏற்றிவைத்து நினைவு நாளை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேசத்தின் குரல் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலைகளால் அணிவிக்கப் பட்டது.
எங்கள் தாயக போரியல் இராணுவ மரியாதைக்கு இணை சேர்க்க அணி வகுத்து வந்த எங்கள் தமிழ் உறவுகள் மலர் வணக்கத்துடன் கூடிய சுடர் வணக்கத்தையும் செலுத்தினர்.
அதன் பின்பு-
தமிழீழ நினைவுகள் பதிந்த இசை வணக்கத்துடன், நடுகல் பூமி இறுவட்டைத் தயாரித்த இசைக் கலைஞருக்கான சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வுகள் அண்ணாவின் நினைவை ஒட்டி நடைந்தேறியது.
அத்தடன் வீர காவியங்கள் தாங்கிய எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.
இறுதியாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் விட்டுச் சென்ற எங்கள் உரிமைகளுக்காக விட்டுச்சென்ற அரசியல் பணியினை புலம்பெயர் எங்கள் தமிழ் உறவுகள் அனைவரும் இணைந்து சத்தியத்தியாகின் முன் நின்று அறமுடன் உண்மையுடன் நேர்மையுடன் நம்பிக்கையாக முன்னெடுப் போம் என்ற உறுதி மொழியோடு நிகழ்வு நிறைவுபெற்று நிறைவுக்கு வந்தன.
நாம் நாடு கடந்து போனாலும் நமது குரலின் பதிவை எடுத்த பாலா அண்ணாவின் நினைவுகள் பதிந்த தடயங்களும் அவர் பயணங்களும் இடையில் தடைப்பட்டு நின்று விடாது.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.
தமிழீழம்.
.
No comments:
Post a Comment