
மரபுரிமை ஸ்தானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கிழக்கில் மரபுரிமை ஸ்தானங்கள் நாசமாக்கப்படுகின்றன. புலிகள் இருந்திருந்தால் ஆபத்து ஏற்பட்டிருக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இன, மத ரீதியாக மரபுரிமைகளைப் பார்க்கக் கூடாது. கிழக்கில் புதையல் தோண்டுவதற்காக சென்றோர் அங்கு புலிகள் இருந்தமையினால் திரும்பி வந்துவிட்டனர். புலிகள் இருந்திருந்தால் மரபுரிமை ஸ்தானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது” என அவர் மேலும் தெரிவித்தார். ___
No comments:
Post a Comment