சனல் 4 தொலைக் காட்சியின் போர்க்குற்றச் சாட்டுக்கான காணொளிக்கு கையடக்க தொலைபேசியில் பிடிக்கப்பட்ட படங்களை வழங்கிய படைவீரர்கள் தொடர்பில் படையினர் மத்தியில் இரகசியமான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படத்தை வழங்கியதாக கூறப்படும் இலங்கைப் படைவீராகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 காணொளிக்காக கையடக்க தொலைபேசி படங்களை வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள படைவீரர்கள், ஏற்கனவே குறித்த படங்களை தமது அதிகாரிகளிடம் வழங்கியிருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனினும் அவர் தம்மீதான குற்றச்சாட்டை குறித்த படைவீரர்கள் மறுத்துள்ளார்கள்.
வன்னியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றபோது பல படைவீரர்கள் தமது கையடக்க தொலைபேசிகளில் படம்பிடித்ததாக குறித்த வீரர்கள் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த படங்களை ஒளிப்பதிவு செய்வதற்கு 2009 ம் ஆண்டு மே மாதம் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட படைவீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment