ஆனால் வெளிவராமல் மூடிமறைக்கப்பட்ட செய்திகள் என்ன? இச் சம்பவத்தின் பின்னணி என்ன? சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் பெயர் பாலச்சந்திரன்.
பாலச்சந்திரன் உடலில் அடிகாயங்கள் எதுவும் இல்லை என தற்போது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் அடிகாயங்களால் தான் இறந்தார், பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்று ஊடகங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பான விடயம். பாலச்சந்திரன் வீட்டிற்குச் சென்ற சிலர் அவரை வேறு ஒரு விடயமாக பேசவேண்டும் எனக் கூறி சற்றும் சந்தேகப்படாத வண்ணம் அவரை அழைத்துவந்து கொலைசெய்துள்ளனர்.
தூக்கிலிடப்பட்டதாகச் சொல்லப்படும் மைதானத்தில் இருந்து சுமார் 500 மீட்டருக்கு பக்கமாக ஒரு இராணுவ முகாமும், காவலரணும் உள்ளன. அப் பகுதிக்கு இரவு 9.00 மணிக்குப் பின்னர் செல்லும் அனைவரும் சோதனைச்சாவடியில் கையெழுத்து இடவேண்டும் என்பது இராணுவத்தின் கட்டளை.
இந் நிலையில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த இடத்துக்கு அருகாமையில் அவர் அணிந்து வந்த தலைக்கவசம்(ஹெல்மெட்) சூ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன காணப்படுகின்றன. ஒருவர் கடத்தப்படும்போதோ இல்லை அவசரமாக வீட்டில் இருந்து வெளியேறும்போதோ நிதானமாக எல்லாப் பொருட்களையும் எடுத்து மாட்டியவண்ணம் செல்லமாட்டார்கள்.
ஆனால் பாலச்சந்திரனை அவ்விடத்துக்கு அழைத்துவந்தவர்கள் சற்றும் சந்தேகப்படாத வண்ணம் செயல்பட்டுள்ளனர். அவர் கூக்குரலிடாத வகையில் தலையை மூடிக் கட்டி மெளனமாகச் சித்திரவதை செய்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி இறுதியில் கொல்லும் ஏர் பாக் எனப்படும் பொருள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என தற்போது கூறப்படுகிறது. காரணம் இவர் மூச்சுத் திணறலில் இறந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இவ்வாறு ஏர் பாக்கை பாவித்து கொலைசெய்வது வழக்கம். மூச்சுத் திணறலில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பதாவும், தூக்கில் இட்டதால் அவர் இறக்கவில்லை என்பதும் வைத்தியசாலை வட்டாரங்களில் பேசப்படும் செய்தி. குறிப்பாக தூக்கில் இட்டும் அவர் கழுத்து எலும்பு உடையவில்லை என்பது மற்றுமோர் செய்தியாக உள்ளது.
ஆனால் அவர்கள் வாயைத் திறந்தால் பாலச்சந்திரன் கதிதான் அவர்களுக்கும். திட்டமிட்ட ரீதியில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதும், பின்னர் அவர் முந் நாள் போராளி என்று இராணுவமே செய்திகளைக் கசியவிட்டுள்ளது. இலங்கையில் நடந்த பல கொலைகளுக்கு அரசாங்கம் விளக்கம் கொடுக்கும்போது அவர்கள் புலிகள் என நொண்டிச்சாட்டு சொல்லிவந்தனர். ஆனால் அதனையே இப்போது தமிழ் ஊடகங்களும் செய்து வருகின்றமை வருந்தத்தக்கது.
பாலச்சந்திரன் ஒரு முந் நாள் போராளி என்பது உண்மைதான். ஆனால் அவர் அவ்வியக்கத்தில் இருந்து விலகி யாழில் வசித்துவந்துள்ளார். இந் நிலையில் இவரை நன்கு திட்டமிட்டு ஈ.பி.டி.பி கூலிப்படையுடன் சேர்ந்து இலங்கை இராணுவமே கொலைசெய்துள்ளது என பலரும் சந்தேகிக்கின்றனர்.
இக் கொலையில் ஈ.பி.டி.பி குழுவுக்கும் இராணுவத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்வதும், கடன்காரன் தொல்லையால் அவர் தன்னை தூக்கிலிட்டார் என பத்திரிகைகள் எழுதுவதும் நிறுத்தப்படவேண்டும். இது ஒரு இரத்தத்தை உறையவைக்கும் கொலை மிரட்டல். தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி கொலை அச்சுறுத்தல். ஏதாவது பேசினால் நாளை நீங்களும் மரத்தில் தொங்குவீர்கள் என்பதனை இராணுவம் நேரடியாகச் செய்துகாட்டியுள்ளது.
No comments:
Post a Comment