இலங்கை மற்றும் நெதாலாந்து ஆகிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு அனுப்புவதற்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 பேர் மீது சுவிட்ஸர்லாந்து சட்டத்தரணிகள் விசாரணைகளை நடத்தவுள்ளனர்.
NZZ am Sonntag என்ற செய்திதாளின் தகவல்படி, நெதர்லாந்து மற்றும் சுவிஸ் சட்டத்தரணிகள் இது தொடர்பில், சுவிட்ஸர்லாந்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நிதிக்கு பொறுப்பானவரிடம் விசாரணைகளை நடத்தவுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 விடுதலைப்புலி சந்தேக உறுப்பினர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள தமிழர்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறுவதன் மூலம் நிதிச்சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதன்படி 73 ஆயிரம் டொலர்கள் முதல் 104 ஆயிரம் டொலர்கள் வரை கடன்களாக பெறப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று சுவிட்ஸர்லாந்தின் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளிடம் விசாரணைகளை நடத்த 2011 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கமும் அனுமதியளித்தது.
எனினும் சிறையில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை சுவிட்ஸர்லாந்து மற்றும் நெதர்லாந்து சட்டத்தரணிகள் விசாரணை செய்யும் போது இலங்கையின் காவல்துறையினர் சமுகமளிக்க முடியாது என்ற அடிப்படையிலேயே இலங்கை அதிகாரிகளுக்கும் சுவிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் NZZ am Sonntag செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment