
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 370 பேர் எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்தப்படவுள்ள தீபாவளி தின நிகழ்ச்சியின்போது, பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்னிலையில் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 10 ஆயிரத்து 243 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment