
மே மாதம் திரைக்கு வருவதாகச் சொல்லப்பட்ட சகுனி அடுத்த மாதமே திரைக்கு வருகிறது.
அறிமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் முதலில் சலீம் கௌஸ் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பு சரியில்லை என அவரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து ரீஷூட் செய்தனர். இதனால் சகுனி வெளியாவது காலதாமதமானது.
இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரணீத்தா நடித்துள்ளார். ராதிகா, ரோஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் ஆடியோ வரும் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சகுனி இங்கு வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு ஆடியோ 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.



No comments:
Post a Comment