நேற்றைய தினம் இந்திய செய்திச் சேவையான ஹெட் லைன்ஸ் ருடேக்கு அவர் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் எனக் கூறியிருந்த கருத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
தமிழக முதல்வர் என்றால் அவர் எதைச் செய்யலாம் எதனைச் செய்யக்கூடாது என்ற வரைபிலக்கணத்தை அவர் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார். போர் குற்றம் போர் குற்றம் என்று பேசுவதை முதலில் நிறுத்திவிட்டு, உண்மையாகவே தமிழர்களில் அக்கறை இருந்தால் ஜெயலலிதா அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இலங்கை அரசு மேற்கொள்ளும் புணர்வாழ்வுக்கு அவர் ஆதரவு தரவேண்டும் எனவும் கணத்த தொணியில் கூறியுள்ளார்.
மேலும் தனது கருத்துகளைத் தெரிவித்த கோத்தபாய , சீனா ரஷ்யா, தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலையில் உள்ளதாகவும், ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். அந் நாடுகளே தம்மை சர்வதேசம் என்று அழைத்துக்கொள்கிறது என்று கிண்டலடித்த கோத்தபாய, எல்லா நாடுகளும் சேர்ந்தால் தான் சர்வதேசம், ஒரு சில நாடுகள் கூட்டுச்சேர்ந்தால் அது சர்வதேசம் ஆகிவிடாது எனக் காரசாரமாக வாதிட்டார்.
அவர் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சாடினார் எனபது வெளிப்படையாகத் தெரிந்தது. அதுமட்டுமல்லாது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கூற்றுக்கள் அவரை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதையும் இந்த நேர்காணல் மூலம் உணர முடிவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பெரும் அரசியல் அனுபவம் கொண்ட மற்றும் பல மூத்த அரசியல்வாதிகளோடு பழகி பல தடவைகள் தேர்தலில் வென்று தற்போதும் பெருவெற்றி கண்டுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறும் அளவுக்கும் மறை முகமாகச் சவால் விடும் அளவுக்கும் கோத்தபாய பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
அரசியல் நாகரீகமற்ற செயலையும் பேச்சையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்துவருவது இங்கே தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ ஜெயலலிதா தனது சொந்த நலனுக்கும் அரசியல் தேவைகளுக்காகவும் ஈழத் தமிழர் விடையத்தைப் பயன்படுத்தி வருவதாக நேரடியாகக் குற்றஞ்சாட்டினார். இவரது நேர்காணலை கீழ் காணும் லிங்கில் அழுத்தி பார்க்கமுடியும்.
http://indiatoday.intoday.in/site/video/sri-lanka-tamil-issue-jayalalithaa/1/147483.html
அதிர்வு


No comments:
Post a Comment